Elephant Electrocuted And Died: நெல்லையில் அதிர்ச்சி: பனைமரத்தை பிடுங்கிய யானை மின்சாரம் தாக்கி பலி

நெல்லை: 2 வயதுடைய ஆண் யானை ஒன்று (Elephant Electrocuted And Died) அங்குள்ள பனைமரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. அப்போது ஒரு பனைமரத்தைப் பிடுங்கியபோது மின்சார கம்பம் சாய்ந்து வயர் யானை மீது பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. அவைகள் அவ்வப்போது கிராமங்களில் உள்ள வயல்களுக்கு படையெடுப்பது வழக்கம். இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்த வயல்களில் உள்ள பயிர்களை பாதுகாக்க தடுப்பு வேலிகள் மற்றும் மின்சார வேலிகளை சிலர் அமைத்துள்ளனர். அது போன்ற சமயங்களில் வனவிலங்குகள் அதில் சிக்கி உயிரிழப்பதையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட சிங்கம்பட்டி பீட் இரண்டிலுள்ள பட்டா நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். அப்பகுதிக்குள் நுழைந்த இரண்டு வயதுள்ள ஆண் யானை, அங்கிருந்த பனைமரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. ஒரு பனைமரத்தைப் பிடுங்கியபோது அதன் பசுமையான மட்டை அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தில் பனை பட்டதால் அதில் பாய்ந்த மின்சாரம் யானை உடலில் பட்டதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இது பற்றிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்ததை தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்பிரியா தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.