Indian Coast Guard Captures Pakistani Boat: சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் படகை பிடித்த இந்திய கடலோர காவல் படை

குஜராத்: குஜராத் மாநிலம், துவாரகா பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்த (Indian Coast Guard Captures Pakistani Boat) பாகிஸ்தான் படகில் இருந்த ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது மட்டுமன்றி அதில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பேரை அதிரடியாக இந்தியா கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (டிசம்பர் 26) அதிகாலை நேரத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று இந்திய கடல் எல்லையில் நுழைந்துள்ளது. இதனை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கண்டுப்பிடித்தனர்.

அப்போது கடலோர காவல் படையினரை பார்த்து பாகிஸ்தான் மீன்பிடி படகு வேகமாக சென்றனர். இதனால் துரத்தி பின் சென்ற காவல் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு சென்று பரிசோதனை செய்தபோது சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், ஆயுதங்களும் இருந்துள்ளது. இதனையடுத்து அதில் இருந்த 10 பேரை கைது செய்தனர். இதுவரையில் அப்பகுதியில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையும் இணைந்து 7வது முறையாக போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.