Egg prices fall: முட்டை விலை சரிவு: என்இசிசி அறிவிப்பு

சென்னை: Egg prices reduced: முட்டை விலை இன்று 25 பைசா குறைந்து, ஒன்றுக்கு ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முட்டை உற்பத்தியில் பிரதானமாக விளங்கும் நாமக்கல்லில் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (National Egg Coordination Committee) கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நேற்றைய பண்ணை கொள்முதல் விலை (Farm purchase price) ரூ.4.45 என இருந்த நிலையில், ஒரு முட்டையின் விலை 25 பைசா குறைத்து ரூ.4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 40 பைசாவாக நெஸ்பேக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.05 கிடைக்கும்.

சென்னையில் ரூ.4.25, பர்வாலா ரூ.3.35, பெங்களூர் ரூ.4.25, டெல்லி ரூ.5.24, ஹைதராபாத் ரூ.3.55, மும்பை ரூ.4.20, மைசூர் ரூ.4.25, விஜயவாடா ரூ.3.65, ஹெஸ்பேட் ரூ.3.85, கொல்கத்தா ரூ.4.25 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பிராய்லர் கோழி (Broiler chicken) உயிருடன் ஒருகிலோ ரூ.77 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கத்தினர் நிர்ணயித்துள்ளனர்.