Death Threat : கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலுக்கு கொலை மிரட்டல்

சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலுக்கு சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் (Death Threat ) விடுத்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) பிரிவுகள் 506-II (குற்றவியல் அச்சுறுத்தல்) மற்றும் 354-டி (பின்தொடர்தல்) (கொலை மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் (Actor Salman Khan) மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கும் கடிதம் வடிவில் கொலை மிரட்டல் வந்தது. மே மாதம் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, அவரது தந்தையும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மிரட்டல் குறித்து விக்கி போலீசில் புகார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்ரீனா இந்த ஆண்டு தனது பிறந்தநாளை மாலத்தீவில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். விக்கி மற்றும் கத்ரீனா 2021 டிசம்பர் 9-ஆம் தேதிய‌ன்று ராஜஸ்தானில்(Rajasthan) நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு முன், விக்கி மற்றும் கத்ரீனா இருவரும் தங்கள் உறவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தற்போது ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) ஜோடியாக கத்ரீனா நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். அதுமட்டுமின்றி சல்மான் கானுடன் ‘டைகர் 3’ படத்திலும் நடித்து வருகிறார்.

மறுபுறம், விக்கி தற்போது மேகனா குல்ஜாரின் (By Meghana Gulzar) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான சாம் பகதூர், பீல்ட் மார்ஷல் சாம், மனேக்ஷாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்காக தயாராகி வருகிறார். அவர் லக்ஷ்மன் உடேகரின் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் சாரா அலி கானுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறார். பின்னர் பூமி பெட்னேகருடன் ‘கோவிந்தா நாம் மேரா’ படத்திலும் நடிக்க உள்ளார்.