Online class for Kaniamoor students : கனியாமூர் தனியார்பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி மூலம் வகுப்பு

கள்ளக்குறிச்சி: Online class for Kaniamoor private school students : கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி மூலம் வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi )ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் இணைய வழியில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மூடப்பட்ட பள்ளிக்கு அருகில் மூன்றுக்கு அதிகமான கல்வி நிலையங்கள் (Educational institutions) செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல பேருந்து வசதிகள் (Shuttle bus facilities) செய்யப்படும். பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் அனைவரின் கருத்துகளும் கேட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர விருப்பம் தெரிவித்தாலும், அவர்கள் அங்கு சேர சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றார்.

கள்ளக்குறிச்சி மாவ‌ட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதனையடுத்து மாணவி படித்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அருகில் இருந்த பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தனியார் பள்ளி மூடப்பட்டது (The private school was closed). தற்போது அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் கல்வி பயில அரசு மாற்று வழியை ஏற்பாடு செய்து வருகிறது.