TN CM M.K.Stalin : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: CM M.K. Stalin has written a letter to Central Government இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் மீன்பிடிப் படகுகளில் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் (6 Indian fishermen) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய‌ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக‌ முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 97 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து உள்ளனர்.

அவற்றில் சில படகுகள் 2008ம் ஆண்டில் சிறை பிடிக்கப்பட்டதால் முற்றிலும் சேதமடைந்து கிடக்கும் நிலையில் உள்ளது. அந்த படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களிடம் படகுகளின் உரிமையை கோர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்க‌ப்பட்டனர் (Tamil Nadu fishermen were released) என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோருவதாகவும், இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு , மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள் , இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு (Exemption from appearing in court) அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர உதவியதற்கு (For helping to bring him home) மத்திய‌ வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் .