karnataka cet : சிஇடி முடிவுகள் ஜூலை 30ல் வெளியீடு: அமைச்சர் சி.என்.அஸ்வத்த நாராயணா தகவல்

பெங்களூரு: karnataka cet: மாநிலத்தில் நடைபெற்ற சிஇடி தேர்வு முடிவுகள் ஜூலை 30-ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர்.சி.என்.அஸ்வத்த நாராயணா தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வு ஜூன் மாதத்தின் நடுவாரத்தில் நடத்தப்பட்டது. இன்று அமைச்சர் டாக்டர் சி.என்.அஸ்வத்த நாராயண் முடிவு அறிவிக்கும் தேதியை அறிவித்துள்ளார்.

தேர்வு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இம்முறை சிஇடி தேர்வுகள் மிகவும் கண்டிப்புடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட்டன. இந்த முறை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களும் ஜூன் நடுப்பகுதியில் நடைபெற்ற பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை கர்நாடக தேர்வு ஆணைய இணையதளத்தில் ஜூலை 26ஆம் (By 26th July) தேதிக்குள் (செவ்வாய்கிழமை) பதிவிட‌ வேண்டும்.

ஜூன் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாநிலத்தில் CET தேர்வுகள் நடத்தப்பட்டன. விண்ணப்பதாரர்கள் கர்நாடக தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான kea.kar.nic.in இல் ஜூலை 30 அன்று வெளியிடப்படும் முடிவைப் பார்க்கலாம். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை படிப்புகளுக்கு சிஇடி மதிப்பெண் முக்கியமானது.

கர்நாடக CET முடிவுகள் 2022 முடிவுகளைப் பார்ப்பதற்கான படிகள்:

1) KEA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான kea.kar.nic.in இல் உள்நுழைக.

2) முகப்புப் பக்கத்தில் ‘KCET Result 2022’ என்பதைக் கிளிக் செய்யவும்.

3) உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு, ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.

4) உங்கள் தேர்வின் முடிவு திரையில் காட்டப்படும்.

5) முடிவை சரிபார்த்து பதிவிறக்கவும்.

இந்த ஆண்டு மொத்தம் 2,16,525 மாணவர்கள் கர்நாடக CET-2022 க்கு பதிவு செய்திருந்த‌னர். பீத‌ர், பெலகாவி, விஜயபுரா, பல்லாரி, மங்களூரு மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் ஜூன் 18+ஆம் தேதி நடத்தப்பட்ட கன்னட மொழித் தேர்வை எழுத மொத்தம் 1,708 பேர் பதிவு செய்திருந்தனர்.