Drinking Water with Fake ISI Mark:குடிநீர் பாட்டில்களில் போலி ஐஎஸ்ஐ முத்திரைகள்; பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி

சென்னை: BIS officials seized drinking water bottles with fake ISI stamps in Poontamalli. பூந்தமல்லியில் போலி ஐஎஸ்ஐ முத்திரைகளுடன் கூடிய குடிநீர் பாட்டில்களை பிஐஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 மில்லி) குடிநீர் பாட்டில்கள் மற்றும் 4 அட்டைப் பெட்டிகளில் ஐஎஸ்ஐ முத்திரை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குற்றத்திற்காக இரண்டு வருட சிறைதண்டனையோ அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

ஐஎஸ்ஐ முத்திரைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தால் இந்திய தர நிர்ணய அமைவன தென் மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு தெரு, தரமணி, சென்னை – 13 என்ற முகவரியிலோ BIS Care App என்ற செயலிலோ என்ற [email protected] மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-2254 1984 என்ற சென்னை அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது www.bis.gov.in என்ற இணையதளம் முகவரியிலோ அறிந்து கொள்ளலாம் என இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை -2 தலைவர் பவானி தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.