Don’t throw Garbage Beware : கண்ட‌ இடங்களிலும் குப்பை கொடுபவர்களா நீங்கள் ? உங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படலாம் எச்சரிக்கை

பெங்களூரு: Don’t throw Garbage : மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைக் கொட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பெங்களூரில் வசிப்பவர்கள் எச்சரிக்கை இருக்க வேண்டும்.

தகவல், உயிரி தொழில்நுட்ப தலை நகரம் என்று பெயர் எடுத்துள்ள‌ பெங்களூரு, எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக‌ குப்பை பிரச்னை உள்ளது. பெங்களூரில் உருவாகும் பல லட்சக்கணக்கான டன் குப்பைகளை மேலாண்மை செய்வது பெங்களூரு மாநகராட்சிக்கு பெரும் பிரச்சனை உள்ளது. மறுபுறம் மாநகரின் எல்லா இடங்களிலும் கொட்டப்படும் குப்பைகளை சுத்தம் செய்வதும் மற்றொரு சவாலாக உள்ளது. இது குறித்து மக்களுக்கு ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது மாநகராட்சி கடுமையான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. இனிவரும் நாள்களில் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள், வீசுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனிமேல் எங்காவது குப்பையை எறிந்துவிட்டு கையைக் கழுவ வேண்டும் என்று நினைத்தால் கவனமாக இருங்கள். ஏனெனில் இனி பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட‌ குப்பைகளை வீசினால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். மாநகரை குப்பையில்லா நகரமாக்க கிரிமினல் வழக்கு தொடர பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாநகரில் நாளுக்கு நாள் குப்பை உள்ளிட்ட கழிவுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. GVP என்பது குப்பையால் பாதிக்கப்படக்கூடிய புள்ளியாகும். மக்கள் குப்பை கொட்டும் விதியை கடைபிடிக்கவில்லை. எனவேதான் இனி குப்பைகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் போலீஸார் வழக்கு பதிவு செய்வார்கள்.

மாநகராட்சி இயற்கை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொதுமக்கள் புகார் அளித்தால், , கண்காணிப்பு கேமரா அல்லது மொபைல் போன்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஆராய்ந்து கிரிமினல் வழக்கு பதிய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பெங்களூரு மாநகராட்சி ஏற்கனவே மாநகரின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளை அடையாளம் கண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராவை நிறுவியுள்ளது. இருப்பினும் சிலர் இரவோடு இரவாக குப்பைகளை கொண்டு வந்து கொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது தொடர்கிறது. அதை அப்புறப்படுத்துவதும் மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. எனவே இதை தடுக்க கிரிமினல் வழக்கு பதிவு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநாட்சியின் திடக்கழிவு மேலாண்மை பிரிவின் சிறப்பு ஆணையர் ஹரிஷ் குமார் கூறியது: மாநகரில் குப்பைகளை அகற்ற முறையான அமைப்பு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவது தொடர்கிறது. இதனால் குப்பை மேலாண்மையை கடினமாக்க முடிவு செய்துள்ளோம். கண்ட இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்வார்கள் என்றார்.