EXCLUSIVE : ஜமீர்கான் எம்.எல்.ஏவிற்கு ஐஎம்ஏ ஆபரண மாளிகை முறைகேடு வழக்கில் தொடர்பு ? : வரலாற்றில் முதன் முறையாக எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை

மாநிலத்தில் ஊழல் தடுப்புப்படை உருவான பிறகு, எம்எல்ஏ வீட்டில் அதன் அதிகாரிகள் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை. இதுவரை அரசு அதிகாரிகளை குறி வைத்து தாக்கி வந்த அதிகாரிகள் தற்போது எம்எல்ஏ வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு: MLA Zameer Ahmed Khan roll IMA Case : ஐஎம்ஏ ஆபரண மாளிகை வழக்கில் எம்எல்ஏ ஜமீர் அகமது கானின் தொடர்பு குறித்து தங்கவயல் பாபு வீட்டில் அமலாக்க இயக்குந‌ரக (ED) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டப் போது கிடைத்த ஆவணங்கள், ஜமீருக்கு ஆபத்தாக‌ ஆனது. மாநிலத்தில் ஊழல் தடுப்பு படை (ஏசிபி) உருவான பிறகு, எம்எல்ஏ ஒருவரின் இல்லத்தின் மீது சோதனை நடத்தி புதிய வரலாறு படைத்துள்ளது.

கடந்த ஆண்டு, ஜமீர் அகமது கான் எம்எல்ஏ இல்லத்தில் அமலாக்க இயக்குந‌ரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். தற்போது அமலாக்க இயக்குந‌ரக அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

MLA Zameer Ahmed Khan roll IMA Case : எங்கெல்லாம் ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் ?

சிவாஜிநகர் கன்டோன்மென்ட் சாலையில் ஜமீர் அகமது கான் எம்எல்ஏவின் இல்லம்.
ரிச்மண்ட் டவுன் சில்வர் ஓக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள‌ அவரது பிளாட்.
சதாசிவநகரில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகை
பனசங்கரியில் உள்ள ஜிகே அசோசியேட்ஸ் அலுவலகம்.
கலாசிபாளையத்தில் உள்ள நேஷனல் டிராவல்ஸ் அலுவலகம்.
தங்கவயலில் உள்ள‌ பாபுவின் வீடு மற்றும் ஜமீர்கானின் வீட்டிற்கும் தொடர்பு உள்ளவர்களிடம் சோதனை.

அண்மையில் சில நாட்களுக்கு முன்பு, தங்கவயல் பாபு வீட்டில் அமலாக்க இயக்குந‌ரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜமீர் அகமது கானும், தங்கவயல் பாபுவும் பண பரிவர்த்தனை செய்த‌து தெரியவந்தது. தங்கவயல் பாபு வீட்டில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக ஜமீர் அகமது கானின் இல்லத்திலும் ஊழல் தடுப்பு படையினர் சோதனை ஈடுபட்ட‌தாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ இல்லத்தின் மீது ஊழல் தடுப்பு படையினர் முதல் முறையாக சோதனை !

மாநிலத்தில் ஊழல் தடுப்பு படையினர் உருவான பிறகு, எம்எல்ஏ ஒருவரின் வீட்டில் அதன் அதிகாரிகள் சோதனை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதுவரை அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள் தற்போது முதன் முறையாக எம்எல்ஏ ஒருவரின் வீட்டின் மீது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக‌ எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு :

ஜமீர் அகமது கான் எம்எல்ஏ வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜமீருக்கு சொந்தமான 5 பள்ளிகளில் சோதனை செய்த‌னர். அப்போது, ​​இது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை ஈடுபட்ட‌னர். சோதனையில் ஒரு டிஒய்எஸ்பி மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுமார் 10 அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. இந்நிலையில், ஜமீர் அகமது கானின் இல்லத்திற்கு ஊழல் தடுப்பு படையின் எஸ்பி ஹரீஷ் பாண்டே சென்றுள்ளார்.