Chennai-Coimbatore Cheran Express train accident: சென்னை-கோவை சேரன் விரைவு ரயில் விபத்து

திருவள்ளூர்: Detachment of Chennai-Coimbatore Express train coaches. திருவள்ளூர் அருகே சென்னை-கோவை சேரன் விரைவு ரயிலில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்திலிருந்து 12673 என்ற எண் கொண்ட சேரன் விரைவு ரயில் புறப்பட்டு திருவள்ளூர் அருகே நேற்று இரவு 11 மணிக்கு ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது S7 மற்றும் S8 ஆகிய இரு பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டது.

இந்த சத்தத்தை கேட்ட ரயிலில் பயணித்த பயணிகள் பெரும் அச்சத்தில் அலறியுள்ளனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் ரயில் சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி உடைந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் மிக சாமர்த்தியமாக ரயிலை வேகத்தை குறைத்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் ரயிலை நிறுத்தியுள்ளார்.

இந்த ரயில் வழக்கமாக அதிவேகமாக செல்லும் விரைவு ரயில். ஆனால் அப்போது ரயில் நிலையத்தின் அருகே குறைந்த வேகத்தில் சென்றதாலும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு உடைந்த இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரயில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்ழு இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு அவை விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது சம்பவத்தால் ரயில் பயணிகளிடையே பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.