Anbumani Ramadoss : 14 நாட்கள் நீட் பயிற்சி மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: 14 days of NEET practice not enough for students: Anbumani Ramadoss : 14 நாட்கள் நீட் பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐஐடி நுழைவுத் தேர்வு (NEET, IIT Entrance Exam) ஆகியவற்றை எதிர் கொள்வதற்கு பயிற்சி வகுப்புகள் நவ. 19 ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

நீட் தேர்வு வகுப்புகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டாலும், ஓரளவு மேம்பட்ட வடிவில் நடத்தப்பட இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் ஒரு மையம் வீதம் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும் நவம்பர் 17‍ ஆம் தேதி தொடங்கும் நீட் பயிற்சி வகுப்புகள் அதிகபட்சமாக 14 நாட்கள் மட்டும்தான் நடத்த முடியும் (It can be held only for 14 days). தனியார் பள்ளிகளில் பயிலும் நகர்புற வாசியான மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை பயிற்சி பெறும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 நாள்கள் மட்டுமே பயிற்சி அளிப்பது போதுமானதாக இருக்காது.

இந்த உண்மை உணர்ந்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கும் கையேடு, வினாடி விடை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் (Government of Tamil Nadu should come forward to provide manual and quiz to government school students) என்று அவர் அதில் வலியுறுத்தி உள்ளார். அன்பு மணி ராமதாஸின் கோரிக்கை ஏற்று, நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதே அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.