Consideration of Statehood for Puducherry : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பரிசீலனை : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

புதுச்சேரி: Consideration of Statehood for Puducherry : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது (An investigation is underway into the firing by the Sri Lankan Navy on the Puducherry fishermen). இரு நாட்டு மீனவர்கள் கூட்டுக்குழுக் கூட்டம் நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமையும், சுதந்திரமும் உள்ளது (According to the Constitution of India, the Governor of Tamil Nadu has the right and freedom to express his opinion). ஆகவே, திமுக அரசு நீட்டுகிற கோப்புகளில் கையெழுத்திடும் கைப்பாவையாக ஆளுநர் இல்லை. கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்கிறார். அதனாலேயே ஆளுநரின் செயல்பாட்டை திமுகவினர் விமர்சிக்கின்றனர்.

புதுச்சேரி அரசுப் பணியிடங்களில் 10 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,400 பேர் பணியில் நியமிக்கப்படவுள்ளனர். புதுச்சேரி பொருளாதார மண்டலம் சேதராப்பட்டு பகுதியில் 750 ஏக்கரில் அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது (The central government has approved the establishment of Puducherry Economic Zone in Setarapattu area on 750 acres). பொலிவுறு நகர் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் ஆகியவையும், ரூ.500 கோடியில் மேம்பாலத் திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.

புதுச்சேரிக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாகவே ரூ.1,400 கோடி அளித்துள்ளது. அதன்மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்குமாறு முதல்வர் கோரியதை மத்திய உள்துறை பரிசீலித்து நடவடிக்கை (The Union Home Ministry has considered the Chief Minister’s request to grant separate state status to Puducherry)மேற்கொள்ளும் என்றார். பேட்டியின் போது, மாநில அமைச்சர்கள் உறுப்பினர் ஆ.நமச்சிவாயம் . சாய் ஜெ.சரவணன்குமார். மாநிலங்களவை எஸ்.செல்வகணபதி, பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.