Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் சிக்கமகளூர் மாவட்டம் முல்லையங்கிரி பாபாபுடன் கிரி போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்
எனவும் அப்படி செய்தால் மட்டுமே பாபாபுடன் கிரிக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளனர் அதன்படி சனி ஞாயிறு அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவதால் அதை காலை 6 மணி முதல் 12 மணி வரை 600 வாகனங்களும் மட்டும் அதேபோல மாலை 12 மணி முதல் 6 மணி வரை 600 வாகனங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு 1200 வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்
அதேபோல டிடி வாகனத்திற்கு 200 ரூபாய் கட்டணமும் காருக்கு நூறு ரூபாய் கட்டணமும் பைக் மற்றும் ஆட்டோவிற்கு ரூ.50 கட்டணமும் நிர்ணயித்து உள்ளனர் இதனால் சுற்றுலாப் பயணிகள் இனி ஆன்லைனில் புக் செய்தால் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் இல்லை என்றால் கைமரம் என்னும் பகுதியிலேயே செக்போஸ்டிலேயே தடுத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல கார் மற்றும் டிடி வாகனத்திற்கு வாங்கும் பணம் அதிகமாகும் என்பதால் இதற்கும் சுற்றுலாப் பயணிகள் எதிரப்பு தெரிவித்துள்ளனர் தத்தாத்ரேய குகை கோவிலில் பௌர்ணமி அன்று மற்றும் பல்வேறு தினங்களில் பூஜைகள் நடந்து வருவதால் நகர் பகுதியில் இருந்து சிக்கமகளூர் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் எப்படி வாகனங்களுக்கு வாடகை எப்படி கொடுக்க முடியும் இதை நாங்கள் கொடுக்க மாட்டோமென இதை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்



