Chief Minister’s speech is against convention: ஆளுநரை அமரவைத்து எதிராக முதல்வர் பேசுவது மரபுக்கு எதிரானது: எடப்பாடி பழனிசாமி

சென்னை: Leader of Opposition Edappadi Palaniswami has said that it is against tradition for the Chief Minister to sit the Governor and speak in the Legislative Assembly. சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்து முதல்வர் பேசியது மரபுக்கு எதிரானது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தமிழில் ஔவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார்.

அப்போது, திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது போன்ற வார்த்தைகளை தவிர்த்து உரையாற்றினார். அவரின் உரைக்குப்பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தமளிப்பதாக பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னதாகவே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அதன்பின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை சம்பிரதாய உரையாக இருப்பதாகவும், எந்தவித பெரிய திட்டங்களும் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் உரை வெற்று உரையாக இருப்பதாகவும், ஏமாற்றம் மட்டும் மிஞ்சுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அடியோடு சீர்குலைந்து விட்டதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, பேரவையில் ஆளுநரை அமர வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் மரபுக்கு எதிரானது எனவும் அவர் விமர்சனம் செய்தார்.