Chief Minister M.K. Stalin உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முதல்வராக மு.கருணாநிதி அவர்கள் இருந்தப்போது மனித உரிமை ஆணையம் 1996 ஆம் ஆண்டும் அமைக்கப்பட்டது.

சென்னை: A branch of the Supreme Court should be set up in Chennai : உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சனிக்கிழமை மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழா (Silver Jubilee of State Human Rights Commission) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: 1993 ஆம் ஆண்டு தேசிய அளவில் மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்டது. மனித உரிமையை காக்கும் மாண்பாளராக கலைஞர் மு.கருணாநிதி திகழ்ந்தார்.

இந்த ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதி நைனார் சுந்தரம் தலைமையில் அமைக்கப்பட்டது. சட்டத்தை, மனித உரிமையும் காப்பத்தில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. தந்தை பெரியார் இயக்கத்தை தொடங்கிய போது சுயமரியாதை இயக்கம் என்றுதான் தொடங்கினார். சுயமரியாதை, தன்மானம், மனித நேயம், மனித உரிமை (Self-respect, dignity, humanity, human rights) ஆகிய எந்த சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அரசியல் சட்டத்தில் மிகமிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது மனித உரிமைக்குதான். அரசியல் சட்டத்தில் மனித உரிமை, கல்வி உரிமை, எழுத்து உரிமை (Human right, right to education, right to write in law) ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனது தலைமையிலான திமுக அரசு சட்டம், சமூகநீதி, மனித உரிமையை காக்கும் அரசாக உள்ளது. நீதிதுறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு 4.2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 9 மாடி கட்டடம் கட்ட ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப் படும். மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல்துறையினரை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாநில மனித உரிமை ஆணையமானது சமூக நீதியை சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும். மனித உரிமை ஆணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகள், ஒத்துழைப்பை வழங்க அரசு தயாராக உள்ளது. சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, அதுவும் சமூக நீதியின் (social justice) அரசாக அமைவதுதான் மக்களின் அரசாக அமையும். எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவு படுத்தக்கூடாது.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் (A branch of the Supreme Court should be set up in Chennai ). சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்பட‌ வேண்டும். இதற்க உதவிகளை இங்கு வந்துள்ள நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மனித உரிமை தகவல்கள் அனைத்தும் மக்களை சென்றடைய தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்படும். ஆட்சியாளர்களுக்கு வெற்றி தருவது ஆயுதன் அன்று, அவரின் நெறி தவறாது ஆட்சி முறையே. குறள் வழியில் நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன் வைத்து நாங்கள் செல்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்சய் கிசான் உள்பட அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.