Silver medalist Selva Prabhu :காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற செல்வப்பிரபுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : Commonwealth Games Selva Prabhu won silver medal : காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் மும்முறை பதக்கம் வென்ற செல்வ பிரபுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, உலக தடகள சாம்பியன் போட்டியில் உயரம் தாண்டுதலில் மும்முறை பதக்கம் (Triple medalist in high jump) வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியாவுக்கு 2 வது தங்கப் பதக்கம் கிடைத்தது. முன்னதாக உயரம் தாண்டுதலில் தேஜஸின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தற்போது வெள்ளிப்பதக்கம் (Silver medal) வென்றதன் மூலம் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஏற்கனவே 1978 ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சுரேஷ்பாபு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் தாண்டும் (Men’s Long Jump) போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கரும், பஹமாஸ் வீரர் லகான் நப்ரனும் சமமாக‌ 8.08 மீட்டரை தாண்டினர். இதனையடுத்து மறு முயற்சியில் ஸ்ரீங்கர் 7.84 மீட்டரும், லகான் 7.98 மீட்டரும் உயரம் தாண்டினர். இதனையடுத்து விதிகளின் படி லகான் தங்கம் வென்றார்.

மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கப்பதக்கமும், அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் பஜ்ரங் புனியா (Bajrang Punia), கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மௌரிஸ் மெக்னீலை தோற்கடித்தார். அதே போல 86 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகமது இனாமை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 62 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்றில் சாக்ஷி மாலிக், கனடா நாட்டின் அனா பௌலா காடினெஸ் கொன்ஸால்லை தோற்கடித்தார். இதன் மூலம் சாக்ஷி மாலிக் (Sakshi Malik) காமன் வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்ற 3 வது பதக்கமாகும். 2014 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் வெள்ளியும், 2018 ஆம் ஆண்டில் கோல்டுகோஸ்ட்டில் வெண்கலமும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் (PV Sindhu, Kidambi Srikanth) ஆகியோர் தங்கள் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிநாத், டிரீசா ஜாலி கூட்டணி மொரிஷஸின் ஜெமிமா, லியுங், கனிஷா மங்ரா இணைப்பை வீழ்த்தி, காலிறுதிக்கு வந்துள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா, 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை மேலும் பதக்கங்களை இந்திய வீரர்கள் வெல்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.