Chief Minister Discuss About Pongal Gift: பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கப்படுமா? முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Chief Minister Discuss About Pongal Gift) கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. அதே போன்று தி.மு.க. அரசு அமைந்த பின்னரும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு வழங்கியதில் பல்வேறு குளறுபடிகளை தி.மு.க. அரசு சந்திக்க நேரிட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு அரிசி, வெல்லம், கருப்பு உட்பட 21 பொருட்களுடன் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 19) தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருக்க வேண்டும். அதனை எவ்வாறு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு அம்சங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படலாம் என்பன பற்றியும் இதில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஒரு வேளை பணம் வழங்கப்பட்டால் ரேஷன் கடையில் வழங்குவதா அல்லது வங்கியில் செலுத்தப்படுமா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

முந்தைய செய்தியை பார்க்க:Actress Jacqueline Fernandez : நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜாமீன்

முந்தைய செய்தியை பார்க்க:Farmers Protest Again In Delhi: டெல்லியில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒரு லட்சம் விவசாயிகள் போராட்டம்