Actors Celebrated argentina fifa world cup win: பாலிவுட் முதல் கோலிவுட் வரை கொண்டாடிய உலகக்கோப்பை கால்பந்து போட்டி

கத்தார்: From Bollywood to Kollywood, many movie stars also took to Twitter to celebrate Argentina’s World Cup victory. பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான சினிமா நட்சத்திரங்களும் அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றியை தனது டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மெஸ்ஸி தலைமையிலான இந்த அணியின் வெற்றியை இந்தியர்கள் தங்கள் நாட்டின் வெற்றிபோல் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான சினிமா நட்சத்திரங்களும் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விதமாக டுவிட்டரில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

கத்தாரில் நடைபெற்ற இந்த போட்டியை காண மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் மைதானத்திற்கே சென்றிருந்தனர். மிகவும் விறுவிறுப்பான இந்த கால்பந்து போட்டியை நேரில் கண்டுகளித்தது வேறலெவல் அனுபவமாக இருந்ததாக இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

நடிகர் தனுஷ் , “மெஸ்ஸி இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். டி மரியா தேவையான நேரத்தில் உதவினார். எமி மார்டினேஸ் தான் இந்த போட்டியின் நாயகன், ஏன் இந்த உலகக் கோப்பையின் நாயகன் என்றே சொல்லலாம். இந்த வருடத்தின் மகிழ்ச்சியான நாள் இது” என பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்தது இது தான். நான் குழந்தையாக இருக்கும்போது என் அம்மாவுடன் சிறிய டிவியில் பார்த்தபோது என்ன ஒரு ஆரவாரம் இருந்ததோ அதே ஆரவாரம் தற்போது என் குழந்தைகளுடன் பார்க்கும்போதும் இருந்தது. திறமை, கடின உழைப்பு மற்றும் கனவுகள் மீது நம்பிக்கை வைக்கலாம் என நீரூபித்ததற்கு நன்றி மெஸ்ஸி” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மெஸ்ஸியின் தீவிர ரசிகையான நடிகை கீர்த்தி சுரேஷ், அர்ஜென்டினாவின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு இறுதிப்போட்டியை பார்த்துள்ளார். அதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாயுள்ளார்.

இதுதவிர பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், ரன்தீப் ஹூடா ஆகியோரும், நடிகை பிரீத்தி ஜிந்தா, மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஆகியோரும் அர்ஜென்டினாவின் வெற்றியை பாராட்டி தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.