Admk councillor kidnapping: கரூரில் பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தல்: முன்னாள் அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அ.தி.மு.க. (Admk councillor kidnapping) முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனத்தை தாக்கிவிட்டு அதில் இருந்த கவுன்சிலரை 4 காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்றிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான தேர்தல் இன்று ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தம் 12 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளார்கள். இதில் 6 மாவட்ட கவுன்சிலர் தி.மு.க.விடமும், 6 மாவட்ட கவுன்சிலர்கள் அ.தி.மு.க.விடமும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனால் அங்கு உடனடியாக துணைத்தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் பல முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார்.

இதற்காக இன்று இவரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கரூர் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி அருகே பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று 4க்கும் மேற்பட்ட காரில் வந்த மர்ம நபர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரை சுற்றி வளைத்து முன்பக்க கண்ணாடியை உடைத்தது மட்டுமின்றி ஆசிட் வீசி, காரில் இருந்த கவுன்சிலர் திருவிகவை கடத்தி சென்றனர்.

இந்த கடத்தல் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அ.தி.மு.க.வினர் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பே குவியத் தொடங்கிவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று கரூர் மாவட்ட ஊராட்ச துணை தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் கவுன்சிலர் கடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது: எங்களை தாக்கிவிட்டு வேட்பாளரை கடத்தி சென்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும். ஆசிட் வீச்சு மற்றும் கண்ணாடி உடைக்கப்பட்டதால் காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தியை பார்க்க:Pondicherry Admk Anbazagan Accusation: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வராமல் இருப்பதற்கு காரணம் நாராயணசாமி: அன்பழகன் குற்றச்சாட்டு

முந்தைய செய்தியை பார்க்க:Minister Senthil Balaji Asked Annamalai: வெளிநாட்டு கடிகாரம் எப்படி மேட் இன் இந்தியா ஆகும்? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி?