Works Finished Between Nellai And Tiruchendur: நெல்லை, திருச்செந்தூருக்கு இனிமேல் 110 கி.மீ. வேகத்தில் ரயிலில் பயணிக்கலாம்

நெல்லை: நெல்லை, திருச்செந்தூர் இடையே மின்மயமாக்கல் (Works Finished Between Nellai And Tiruchendur) பணிகள் நிறைவடைந்திருப்பதால் அதிகபட்சமாக சுமார் 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்படும் எனவும், அதனால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ரயிலில் பயணம் செல்லும் பக்தர்கள் சிரமமின்றி வேகமாக சென்றடைய உதவும் என கூறப்படுகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். அது போன்று செல்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை, திருச்செந்தூர் அகல ரயில் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுதல் மற்றும் மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.

அதன்படி பணிகள் தற்போது நிறைவடைந்து இருப்பதால் சிறப்பு ரயில் பயணம் மூலம் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுப் பணிக்காக நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது. பாளையங்கோட்டையில் குறிச்சி உபமின் நிலையம் திறக்கப்பட்டு ஆய்வு செய்த அவர், செய்துங்கநல்லூர் மற்றும் ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

மேலும் ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்ட முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, திருச்செந்தூரை சென்றடைந்தார். மீண்டும் மறு மார்க்கத்தில் நெல்லைக்கு வந்து சேர்ந்தார். மேலும், ஆய்வுப்பணிகளுக்காக ரயில்வே மின் பாதையில் 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும் எனவும், பொதுமக்கள் கவனமாக இருக்கவும் அறிவுரை வழங்கினார்.
இது குறித்து ரயில் அனைத்து ரயில் நிலையத்திலும் எச்சரிக்கைப் பலகை வைக்கவும் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Pondicherry Admk Anbazagan Accusation: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வராமல் இருப்பதற்கு காரணம் நாராயணசாமி: அன்பழகன் குற்றச்சாட்டு

முந்தைய செய்தியை பார்க்க:Admk councillor kidnapping: கரூரில் பட்டப்பகலில் அ.தி.மு.க. கவுன்சிலர் கடத்தல்: முன்னாள் அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்