Chief Minister Basavaraj bommai : துப்புரவு தொழிலாளர்களுக்கு மின் இருசக்கர வாகனங்களை வழங்கினார் முதல்வர் பசவராஜ் பொம்மை

இனி துப்புரவு தொழிலாளிகள் ஸ்கூட்டரில் தான் பயணிப்பார்கள். வரும் நாட்களில் அவர்களுக்கு கார்கள் வழங்குவதற்கான சூழல் உருவாகும் என நம்பிக்கை

பெங்களூரு : Chief Minister Basavaraj bommai gave away electric two-wheelers to the sanitation workers: மின் இரு சக்கர வாகனத் திட்டம் 10 பெருநகர மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 600 பேருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 400 பேருக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடக மாநில துப்புரவுத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் இன்று விதானசௌதாவில் அருகே உள்ள அரசு அலுவலகங்கள் உள்ள பல மாடிக் கட்டிடங்களில் (Multi Store) பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்களை வழங்கியப் பின்னர் அவர் பேசியது: துப்புரவு தொழிலாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அவர்கள் செய்யும் பணி மிக முக்கியமானது. நாம் உருவாக்கும் குப்பைகள் ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி அள்ளப்படுகிறது. அவர்களின் பணியை அடையாளம் கண்டு வெகுமதி அளிக்கும் திட்டம் இதுவாகும் என்றார்.

வெளிநாடுகளில் கார்களில் பயணம் செய்யும் துப்புரவுத் தொழிலாளிகளைப் (Cleaners who travel by car abroad) பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது நம் நாட்டிலும் இதுதான் நடக்கிறது. இனி துப்புரவு தொழிலாளிகள் ஸ்கூட்டரில் தான் பயணிப்பார்கள். வரும் நாட்களில் அவர்களுக்கு கார்கள் வழங்குவதற்கான சூழல் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

துப்புரவு தொழிலாளிகளின் அனைத்து கவலைகளுக்கும் அரசு பதில் அளித்து வருகிறது. மின் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்டி இணைக்கவும், பாபு ஜகஜீவன் ராம் பெயரில், சுயதொழில் செய்ய வசதியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் பெட்டியுடன் 100 மின் இருசக்கர வாகனங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பயனடைவார்கள் (25 thousand SC, ST will benefit). அனைத்து வசதிகளையும் படிப்படியாக செய்து தர அரசு திட்டம் வகுத்து வருகிறது. இளைஞர்கள், எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு ஆதரவான அரசு. சமூக நீதி என்பது வார்த்தையில் மட்டுமல்ல, செயலிலும் உள்ள அரசு எங்களுடையது என்று முதல்வர் கூறினார். சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கோவிந்த கார்ஜோள், சீனிவாச பூஜாரி (Minister Govind Karjol, Srinivas Poojary), துப்புரவு தொழிலாளர் கமிஷன் தலைவர் சிவண்ணா, துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு ஆணைய தலைவர் வெங்கடேஷ், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி, சட்டமேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.