Special food on PM birthday.. Rs.8.5 lakh prize: பிரதமரின் பிறந்தநாளில் சிறப்பு உணவு.. ரூ.8.5 லட்சம் பரிசு

புதுடெல்லி: Delhi-based restaurant to launch ’56 inch Modi Ji’ Thali on PM’s birthday. டெல்லியில் உள்ள உணவகம் பிரதமரின் பிறந்தநாளில் ’56 இன்ச் மோடி ஜி’ என்ற சிறப்பு உணவை அறிமுகப்படுத்த உள்ளது.

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான நாளை (செப்டம்பர் 17 ஆம் தேதி) புதிய சாப்பாட்டு வகையை அறிமுகம் செய்ய உள்ளது. டெல்லியின் கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ARDOR 2.1 உணவகம், 56 வகையான பெரிய அளவிலான சாப்பாட்டை பிரதமரின் பிறந்தநாளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

டெல்லியின் கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ARDOR 2.1 உணவகம் இந்த தனித்துவமான யோசனையுடன் சாப்பாட்டை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் சுமித் கலாரா கூறுகையில், பிரதமர் மோடி ஜியை நான் மிகவும் மதிக்கிறேன், அவர் நம் தேசத்தின் பெருமை, அவரது பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை பரிசளிக்க விரும்புகிறோம், எனவே நாங்கள் ’56 இன்ச்’ என்று பெயரிடப்பட்ட இந்த பிரமாண்ட சாப்பாட்டு வகையை அன்று அறிமுகப்படுத்த முடிவு செய்தோம். அதன்படி ’56 இன்ச் மோடி ஜி’ சாப்பாடு வகையை அவருக்கு பரிசளிக்க விரும்புகிறோம். அவர் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்றும் விரும்புகிறோம், ஆனால், பாதுகாப்பு காரணங்களால், எங்களால் அதை செய்ய முடியாது, எனவே இது அவரை மிகவும் நேசிக்கும் அவரது ரசிகர்கள் அனைவரும் வந்து இந்த சாப்பாட்டை ருசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சிறப்பு சாப்பாட்டு வகைக்கு வாடிக்கையாளர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் வழங்கியுள்ளோம். சாப்பிட வரும் யாராவது ஒரு ஜோடி 40 நிமிடங்களில் இந்தத் சிறப்பு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தால் அவர்களுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவோம்.

இதுமட்டுமல்லாமல், செப்டம்பர் 17ம் தேதி முதல் 26ம் தேதிக்குள் எங்கள் உணவகத்துக்கு வந்து சிறப்பு சாப்பாட்டை சாப்பிடுவோரில் அதிர்ஷ்டசாலி அல்லது தம்பதியினரை தேர்ந்தெடுத்து, கேதார்நாத் சென்று வர ஏற்பாடு செய்யப்படுவர். ஏனெனில் இது பிரதமர் மோடி ஜியின் விருப்பமான இடங்களில் ஒன்றாகும் என்று Ardor 2.1 இன் உரிமையாளர் மேலும் கூறினார்.