Lucknow Rains : லக்னோவில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Army Enclave Collapse School Holiday Declared : உத்தரபிரதேசத்தின் ஜான்சி, ஜராய், லக்னோ, கான்பூர் மற்றும் பஹ்ரைச் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

லக்னோ: (Lucknow Rains) கனமழையை அடுத்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தில்குஷாவில் ராணுவ என்கிளேவ் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்ய நாத் இரங்கல் தெரிவித்து, இழப்பீடு அறிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் மழை பெய்து வருகிறது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. லக்னோவின் கண்டோன்மென்ட் பகுதியில் கனமழை (Heavy rain in Cantonment area of Lucknow) காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. சுவர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தொழிலாளர்கள் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு வெளியே குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். இரவு பெய்த கனமழையால் ராணுவ வளாகத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாக காவல்துறை இணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பியூஷ் மோர்டியா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு (The families of the deceased will each receive Rs. 4 lakh compensation) வழங்குவதாக அறிவித்துள்ளார். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் சூர்யபால் கங்வார் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் குறித்து தகவல் கேட்டறிந்தார். கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால், பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லக்னோ நகரில் உள்ள பள்ளிகளை இன்றும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக லக்னோவில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, உத்தரபிரதேசத்தின் ஜான்சி, ஜராய், லக்னோ, கான்பூர் மற்றும் பஹ்ரைச் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் வரலாறு காணாத மழை (Unprecedented rain) பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.