Bike rider killed : பைக்-லாரி மோதியதில் பைக் ஓட்டுநர் பலி

பெங்களூரு: Bike rider killed in bike-lorry collision : போக்குவரத்து விதிகளை மீறி எதிர்திசையில் பைக்கில் வந்த டி பார்ம் மாணவர் வந்த பைக் மீது லாரி மோதியதில் மாணவர் உயிரிழந்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுமன் பானிக் (22). பெங்களூரு கனகநகரில் வசித்து வந்த இவர், தனியார் கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வந்தார். இன்று அதிகாலை இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். ஹெப்பாள் அருகே பெல்லாரி சாலையில் ஷெல்பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தப்போது பைக் மீது எதிரே வந்த லாரி மோதியுள்ளது. இதில் பைக்கை சுமார் 300 மீட்டர் வரை லாரி இழுத்துச் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த சுமன் பானிக் உயிரிழந்துள்ளார்.
சுமார் 300 மீட்டருக்கு லாரியில் பைக் சிக்கியதில், லாரியும், பைக்கும் தீப்பிடித்து எரிந்தது. த‌கவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி, பைக்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அங்கு வந்த சதாசிவநகர் போக்குவரத்து போலீசார் (Sadashivanagar Traffic Police) தீயணைக்கப்பட்டு, போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த லாரி, பைக்கை அப்புறப்படுத்தினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

105 பேர் கைது: 928 செல்போன்கள் பறிமுதல் (105 people arrested: 928 cell phones seized)

பெங்களூரு: பெங்களூரு போலீசார், 105 பேரை கைது செய்து ரூ.86 லட்சம் மதிப்புள்ள 928 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி ஈBangalore Police Commissioner Pratap Reddy) செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது: நகரின் மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மொபைல் போன் திருட்டு வழக்குகள் தொடர்பாக 105 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொபைல் திருட்டு வழக்குகளை கண்டறியும் சிறப்பு நடவடிக்கையின் பின்னர் கடந்த ஒரு மாதத்தில் 105 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மத்தியப் பிரிவில் 121 மேற்குப் பிரிவில் 334, தெற்குப் பிரிவில் 342, வடக்குப் பிரிவில் 131 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட‌ மொபைல் போன்களின் தகவல்களை போலீஸ் இணையதளத்தில் வெளியிடப்படும். ஐஎம்ஐ எண்ணை சரி பார்த்து உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். செய்தியாளர் சந்திப்பில் இணை ஆணையர்கள் விநாயக் பாட்டீல், லக்ஷனா நிம்பராகி, ஸ்ரீனிவாஸ் கவுடா, கிருஷ்ணகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.