Chennai metro stations glow with Lamp: மின்னொளியில் ஜொலிக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள்

சென்னை: Chennai metro stations glow with Lamp: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு (Azadi ka Amrit Mahostav and Har Ghar Tiranga) அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் முகப்பு வாயிலில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

கோயம்பேடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக கட்டிடத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்கவர் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாளான நாளை (15.08.2022) காலை 10.30 மணிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாளருமான மு.அ.சித்திக் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்துகிறார். இந்நாளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 37 அலுவலர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாளருமான மு.அ.சித்திக் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்குகிறார்.

திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 152 பேர் பங்கேற்ப்பு 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரோட்டரி கிளப் ஆலந்தூர், சுகம் மருத்துவமணை மற்றும் யுனைட்டட் விங்ஸ் கிளப் இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச பொது சுகாதார மருத்துவ முகாம் திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த இலவச பொது சுகாதார மருத்துவ முகாம் திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 3 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. மெட்ரோ பயணிகள், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ஊழியர்கள் உட்பட சுமார் 152 நபர்கள் இந்த இலவச பொது சுகாதார மருத்துவ முகாமில் பயனடைந்தனர்.

இந்த இலவச பொது சுகாதார மருத்துவ முகாமில் பி.எம்.ஐ (உயரம் மற்றும் எடை), இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி, சீரற்ற இரத்த சர்க்கரை, உணவு ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாம் சுகம் மருத்துவமணை மருத்துவர்கள் மதன் மற்றும் திவ்யா அகியோர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினரால் நடத்தப்பட்டது. இம்முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர் சிகிச்சை பெற உள்ளவர்கள் இம்மருத்துவமணையிலேயே முதல் முறையாக சிகிச்சை பெற்றால் 20 சதவீத சலுகை கட்டணம் பெறலாம். இந்த முகாம் வருகின்ற 16-ஆம் தேதி அன்று தியாகராயா கல்லூரி மெட்ரோவிலும், 20-ஆம் தேதி அன்று விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மாலை 3 மணி முதல் 8 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த இலவச மருத்துவ முகாமை மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.