Cabinet meeting today: தமிழக முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: Cabinet meeting under the chairmanship of Tamil Nadu Chief Minister today. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதனிடையே அமைச்சரவையில் இதுவரை இரண்டு முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தில் 2 அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு கூட்டப்படும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜனவரியில் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆளுநர் ஆற்றும் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட உள்ளது. அதுபற்றி அமைச்சரவை ஆலோசித்து அங்கீகாரத்தை வழங்கும்.