karaikal sri lanka ferry service:காரைக்காலில் இருந்து இலங்கைக்கு படகு சேவை

காரைக்கால்: புதுச்சேரி ஆன்மீக பூமியாக விளங்கி வருகிறது. அங்கு ஏராளமான ஆன்மீக தலங்கள் இருக்கிறது. மேலும் புதுவையில் 4 பிராந்தியங்களும் கடற்கரை பகுதிகளும் உண்டு.

புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். புதுவை மாநிலம் காரைக்காலில் அழகிய கடற்கரையும் உண்டு. காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்க்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு மத்திய துறைமுக துறை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவியா புதுச்சேரிக்கு வந்தார். அவர் காரைக்கால்-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து காரைக்கால் துறைமுகத்தில் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் துறைமுகம் 600 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. இங்கு படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக துறைமுகங்களின் கூடுதல் செயலர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துறைமுக கட்டுமானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அவர் ஒருசில வாரத்தில் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கப்பட இருக்கிறது. இந்த படகு சேவையால் சுற்றுலாத்துறையில் வருவாய் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.