Bandh today in Puducherry: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரி: Today, AIADMK staged a complete shutdown protest demanding statehood for Puducherry. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள நிலையில் அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கபட்டும், சட்டமன்றத்தில் எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்பட முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் ஒருமித்த கருத்தோடு உள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கக்கோரி, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக புதுச்சேரியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் உணவகங்கள் உள்ளிட்ட எந்த விதமான கடைகளும் திறக்காததால் சுற்றுலாப்பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க புதுச்சேரி முழுவதும் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குறிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே பழைய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தபட்டிருந்த 2 ஆட்டோக்களை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.