Ban on internet gambling : இணைய சூதாட்டத்திற்கு தடை ஆக. 12 க்குள் கருத்து தெரிவிக்கலாம் : தமிழக அரசு

இணைய சூதாட்ட விளையாட்டை தடை செய்வது அல்லது ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இணைய விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை: Ban on internet gambling. Comment by Aug. 12 : இணைய சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக ஆக. 12-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை (Department of Home Affairs, Government of Tamil Nadu), ஆயத்தீர்வை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இணைய சூதாட்டத்தை தடை செய்வது அல்லது ஒழுங்குப் படுத்துவது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அண்மைக் காலமாக இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டு, நிதி நெருக்கடி ஏற்படுவதால், சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. வரைமுறையற்ற சூதாட்ட விளையாட்டுகளால், கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.

இணையதள சூதாட்ட விளையாட்டுத் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு (The panel headed by retired High Court judge K. Chanduru) அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் அரசின் தீவிர பரிசோதனையில் உள்ளது. இணைய சூதாட்ட விளையாட்டை தடை செய்வது அல்லது ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைய தலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இணைய விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளை கேட்க அரசு முடிவு செய்துள்ளது. இணைய சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது அல்லது ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக கருத்துக்களை பகிர விரும்புபவர்கள், தங்கள் கருத்துகளை [email protected] என்ற முகவரிக்கு ஆக. 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

இணைய விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியாக பகிர விரும்பும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து, தங்களது கருத்துகளை தெரிவிக்க ஆக. 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் (Aug. 9th by 5 p.m)தங்களது வேண்டுகோளை மேலே குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரியில் அனுப்பி வைக்கலாம். கருத்துக் கேட்புக் கூட்டம் ஆக. 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் நடைபெறும். ஒவ்வொரு நிறுவனத்திற்கு தனி நேரம் ஒதுக்கப்படும். இந்நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் இக்கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இணைய சூதாட்ட விளையாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் (chennai High Court) தொடரப்பட்ட வழக்கில் தடை ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இணைய விளையாட்டில் ஈடுபட்ட 20 மேற்பட்டவர்கள் நிதி பிரச்னையால் மரணமடைந்தனர். இதனையடுத்து இணைய சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்து வருகிறது. சீனா போன்ற நாடுகளில் இணைய சூதாட்ட விளையாட்டிற்கு தடை இல்லை. ஆனால் கட்டுப்பாடுகள் உள்ளன. அதுபோன்ற கட்டுப்பாடுகள் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இணைய சூதாட்ட விளையாட்டை தடை செய்வது அல்லது ஒழுங்குபடுத்துவது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.