Commonwealth Games : காமன் வெல்த் விளையாட்டுபோட்டியில் இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்கள்

பர்மிங்ஹாம் : Commonwealth Games, India won 4 Gold medal in one day :காமன் வெல்த் விளையாட்டுபோட்டியில் 10 வது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்கள் வீரர்கள் பெற்று தந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்க்ஹாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. விளையாட்டுப்போட்டி திங்கள்கிழமை நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை (Gold, Silver and Bronze medals) வென்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல்-சத்யன் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

குத்துச் சண்டையில் ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் அமித் பங்கால், பெண்களுக்கான 48 கிலோ பிரிவில் நீது கங்காஸ், 50 கிலோ பிரிவில் நிகாத் ஜரீன் மற்றும் டிரிபள் ஜம்ப் போட்டியில் எல்தோஸ் பால் தங்கப் பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் எல்தோஸ் பால் காமன் வெல்த் விளையாட்டில் டிரிபள் ஜம்ப் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் (First gold medal in triple jump competition) வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

டிரிபள் ஜம்ப் போட்டியில் எல்தோஸ் பாலை தொடர்ந்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா அபுபக்கர் (Abdullah Abu Bakar) வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 4 வது இடத்தை பிடித்தார்.

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் போட்டியில் இந்தியாவின் சந்தீப்குமார் வெண்கலப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி (Annu Rani) 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பெண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன், இந்திய அணி மோதி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி பெண்கள் அணி (Indian women’s hockey team), 16 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றுள்ளது. 2002 ஆம் ஆண்டு தங்கமும், 2006 ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கத்தை இந்திய பெண்கள் ஹாக்கி அணி வென்றிருந்தது.

டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல்-சத்யன் (Sarathkamal-Sathyan)ஜோடி, இங்கிலாந்து நாட்டின் பால்டிரிங்க் ஹால், லியாம் பிச்போர்டு ஆகியோரை தோல்வியுறச் செய்து, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இந்தியக் குடியரசு தலைவர் திரௌபடி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி (Prime Minister Narendra Modi), விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாக்கூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 5 வது இடத்திலும் (India 5th position) உள்ளது. இந்தியாவிற்கு 17 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இந்திய வீரர்கள் மொத்தமாக 50 பதக்கங்களை வென்றுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் 72 நாடுகள் பங்கு கொண்டன‌