BJP state president K. Annamalai : கிசான் கடன் அட்டை மூலம் தமிழக விவசாயிகள் பயன்: பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை

சேலம்: Farmers of Tamil Nadu benefited through Kisan Credit Card : கிசான் கடன் அட்டை மூலம் தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாய்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Tamil Nadu Farmers Unions) சார்பில் வாழ்வுரிமை மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு அவர் பேசியது: பிரதமரின் கிசான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பயனடைந்தன. இந்திய அளவில் விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. 21 பொருள்களுக்கு மத்திய அரசால் ஆதார விலை கொடுக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,040 வழங்கப்படுகிறது. சுமார் 56 சதம் நெல்லுக்கு ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 83 லட்சம் அதிகமான விவசாயிகள் கிசான் கடன் அட்டை மூலம் பயனடைந்துள்ளனர். அவினாசி, அத்திக்கடவுத் திட்டத்தில் (Avinasi, Athikadavu project) மத்திய அரசின் ரூ. ஆயிரம் கோடி பங்களிப்பில் தொடங்கி, 96 சதம் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் ஒரு கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்கப்படாமல் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் குளிர்பானக் கிடங்குகள் உருவாக்கப்படும். இயற்கை விவசாயம் இந்தியாவில் தொடங்கி விட்டது. சிக்கிம் மாநிலத்தில் 100 சதம் இயற்கை விவசாயத்தை பின்பற்றுகின்றனர். இந்தியாவில் உள்ள 15 மாநிலங்கள் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக உள்ளன. ஆனால் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் அரசு ஆர்வம் காட்டாமல் உள்ளது. இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நம்மாழ்வாருக்கு பாரத் ரத்னா (Bharat Ratna for Nammalwar) விருதை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதனை பிரதமருக்கு அனுப்பி உள்ளோம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ. 1.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாஜக ஆட்சியில் ராமராஜ்யம் அமைக்கப்படும். இது மகாத்மா காந்தியின் (Mahatma Gandhi) கனவாகும் என்றார்.மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு விவசாயிகள் நலன் கருதி பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே தமிழக விவசாயிகள் பலனடைய முடியும். தமிழக அரசு தேவை இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களை பல திட்டங்களை எதிர்த்து வருகிறது. எதிர்ப்பு என்ற பெயரால் மாநிலத்தில் வளர்ச்சியை கெடுக்கக்கூடாது. குறிப்பாக விவசாயிகள் வளர்ச்சியை தடுக்கக் கூடாது என்றார்.

மேலும் பொங்கலின் போது வழங்கப்படும் வேட்டி சேலை தயாரிப்பு பணிகள் தமிழக நெசவாளர்களுக்கு (weavers of Tamil Nadu) வழங்கப்படும். தமிழகத்தில் 1.80 லட்சம் கோடி வேட்டி, சேலைகள் தேவைப்படுகின்றன. தமிழக அரசு பொங்கலுக்கு வழங்கப்பட உள்ள வேட்டிச் சேலைகளை வெளிமாநிலத்தில் வாங்க ஆரம்பித்துள்ளது. இலவச வேட்டிச் சேலை குறித்து மாநில அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.