Ayyappa Devotees Van Accident: குமுளி மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்; ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பலி

தேனி: 8 people died when a van carrying Ayyappa devotees overturned on the Kumuli mountain pass near Theni. தேனி அருகே குமுளி மலைப்பாதையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 11 பேர் வேனில் சபரிமலைக்கு சென்றிருந்தனர். தரிசனம் முடிந்து இவர்கள் அனைவரும் அதே வேனிலேயே ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சுமார் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வேன் இறைச்சல் பாலத்தைக் கடந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

அப்போது டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேகமாக வந்த வேன் தடுப்புச்சுவரில் மோதி, போர் பை டேமில் இருந்து பெரியாறு மின்நிலையத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் கவிழ்ந்தது. 300 அடிபள்ளம் கொண்ட இந்த குழாயில் கவிழ்ந்ததோடு, 100 அடி துாரம் குழாயில் உருண்டது. அடுத்த தடுப்புச்சுவரில் மோதி நின்றது.

இதுகுறித்து தகவலறிந்த குமுளி லோயர்கேம்ப் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி., உட்பட பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் டிரைவர் கோபாலகிருஷ்ணன், 42, மற்றும் பக்தர்கள் முனியாண்டி, 55, தேவதாஸ், 55, நாகராஜ், 46, வினோத், 47, சிவக்குமார், 45 உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிறுவன் ஹரிகரன், 7 உட்பட மீதம் 3 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்தாலும் மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு படையினருடன் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.