Anbumani Ramadoss talk about milk Price Hike.பால் விலை உயர்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: Anbumani Ramadoss talk about milk Price Hike தனியார் பால் விலை உயர்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்து்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் அரசு நிறுவனமான ஆவின், 38.26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்து வருகின்றன.

தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவது வழக்கமாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிரடியாக உயர்த்தப்பட்டது. டீக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை தனியார் பாலையே உபயோகித்து வருவதால் தனியார் பால் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

லிட்டருக்கு ரூ.4 உயர்வு இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயருகிறது.

அதன்படி சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அதிர்ச்சி இந்த புதிய முடிவு, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் 84 சதவீத பாலின் தேவை, தனியார் பால் நிறுவனங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் எந்தவித யோசனைகளும் செய்யாமல், யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக பால் நிறுவனங்கள் விலையை அதிகரித்து வருகின்றனர்.

இந்த போக்கு மிகவும் தவறானது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தனியார் பால் விலை நிர்ணயம் குறித்து சரியான வரைமுறைகளை கையாள நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பால் முகவர்கள் கோரிக்கை இதே கோரிக்கையை பால் முகவர்களும் விடுத்துள்ளனர். ‘தனியார் நிறுவனங்கள் பாலின் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பால் விலையை அரசே நிர்ணயம் செய்யவேண்டும். இதற்காக பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு அமைக்கவேண்டும்’, என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பால் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள் லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54 – 56, ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்கின்றன. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள். 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

பால் சந்தையில் ஆவினின் பங்கை 50% ஆக உயர்த்துவது; பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.