Confiscated cattle will not be returned: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பறிமுதல் கால்நடைகள் திருப்பித்தர மாட்டாது: ஆணையர்

காஞ்சிபுரம்: Confiscated cattle will not be returned: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பறிமுதல் கால்நடைகள் திருப்பித்தர மாட்டாது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருகிவரும் தொழிற்சாலைகள் குடியிருப்பு பகுதிகளால் விவசாய பகுதிகள் குறைந்தும் , கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை அவிழ்த்து விட்டு விடுவதால் நகரின் சாலைகளிலும், தேசிய, மாநில சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிந்து வருகின்றன.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன விபத்திலும் கனரக லாரிகளின் அதிவேகத்தால் கால்நடைகள் விபத்துக்குள்ளாகி இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் இதுகுறித்து கேட்டபோது , காஞ்சிபுரம் நகரில் உலவும் கால்நடைகளால் விபத்து மற்றும் சீர்கேடு நிலவுகிறது எனவும் , இதனை தடுக்கும் விதத்தில் கால்நடை உரிமையாளர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்ட உள்ளது.

தற்போது மாநகராட்சி பல்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இனி வரும் காலங்களில் நகரில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதனை நகராட்சி மூலம் பறிமுதல் செய்யப்பட்டு பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் அதனை திருப்பித் தரப்பட மாட்டாது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டு பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கால்நடைத்துறை மின்சாரம் , அரசு போக்குவரத்து கழகம் , வருவாய்த்துறை , இந்து சமய அறநிலைத்துறை , காவல் ஆய்வாளர் , போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் அதிகளவில் நாய் தொல்லைகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதால் அதனை பிடித்து கருத்தடை செய்தல் , மாநகராட்சி பகுதியில் உள்ள 14 திருக்கோயில் குளங்களை மழை நீர் சேமிப்பு குளங்களாக மாற்ற ஆலோசிக்கப்பட்டது.

அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுதல் , நகரில் மினி பஸ் இயக்குதல் , ஆட்டோ ஓட்டுநர் உடன் இணைந்து காஞ்சி சுற்றுலா ஆட்டோ திட்டம் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தீயணைப்பு துறை மூலம் மாநகராட்சி உயிர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என பயிற்சி அளிப்பது , நகரின் போக்குவரத்துக்கு இடைவெளிவாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது , பல்லடுக்கு வாகன நிறுத்த திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டம் குறித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் கூறுகையில் , இனி மாதம்தோறும் பல் துளை அலுவலக ஆலோசனை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று காஞ்சிபுரம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக ஆக்க திட்டமிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், பொறியாளர் கணேசன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.