Heavy rain warning : இந்த மாநிலங்களில் கனமழை, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம் (Maharashtra, Karnataka) மற்றும் இமாச்சலத்தின் பல மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில், சதாரா, ரத்னகிரி, புணே, ராய்காட், பால்கர் மற்றும் நாசிக் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம்விடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் (Heavy rains in 6 districts of Karnataka) என்றும், மத்தியப் பிரதேசத்தில் 25 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட‌ கன்னடம், ஷிமோகா, உடுப்பி, சிக்மகளூர், தென் கன்னடம், குடகு ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கில், இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா, காங்க்ரா, மண்டி, சிம்லா, சோலன் மற்றும் சிர்மௌர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்யக்கூடும்.

வட மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் (Punjab and Haryana), வானிலை மையம் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராஜஸ்தானைப் பொறுத்தவரை, உதய்பூர், துங்கர்பூர் மற்றும் பன்ஸ்வாராவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாது, தென் பகுதியில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அன்று தினசரி வானிலை புதுப்பிப்பில், மத்திய பிரதேசத்தில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பரவலாக இருக்கும் என்று கூறியது; 13 மற்றும் 15ம் தேதிகளில் சத்தீஸ்கர்; 12, 13 மற்றும் 15 தேதிகளில் குஜராத்; 2022 ஆகஸ்ட் 12 முதல் 15 வரை கொங்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் (Goa and Central Maharashtra). கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில், 14 ஆம் தேதி கங்கை நதி மேற்கு வங்கத்தில் பெருமளவு மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

13 மற்றும் 14 தேதிகளில் ஜார்கண்ட், 12 ஆம் தேதி ஒடிசா, 13 மற்றும் 14ம் தேதிகளில் அருணாச்சல பிரதேசம்; அசாம் மற்றும் மேகாலயா 13 முதல் 15 வரையிலும், ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் (Nagaland, Manipur, Mizoram) மற்றும் திரிபுரா வரையிலும். மேலும், ஆகஸ்ட் 13-ம் தேதி வட வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் அதிகரித்து மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும்.

கனமழை அதிக உள்ள மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சம்பந்தப்ப மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிராம பஞ்சாயத்துகள் விடுமுறையை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.