Prime Minister’s Mother Passes Away: பிரதமர் தாய் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (Prime Minister’s Mother Passes Away) உடல் நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30) காலமானார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் என்று பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.