Kanchipuram Varadaraja Perumal temple: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில் ரூ 65 லட்சம் காணிக்கை

காஞ்சிபுரம்: 65 lakh donation in Kanchipuram Varadaraja Perumal temple bill. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில் ரூ 65 லட்சம் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து உண்டியலில் 120 பேர் கொண்ட குழுவினர் நேற்று காணிக்கை எண்னும் பணியை மேற்கொண்டனர்.

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நகரில் பல திவ்ய தேசங்களும் பல உலக புகழ்பெற்ற கோயில்களும் அமைந்துள்ளது. இதனைக் கண்டு ரசிக்கவும் , தரிசிக்கவும் நாள்தோறும் வெளிநாடு, வெளி மாநில மற்றும் தமிழக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

இது மட்டும் இல்லாது தங்களது ஜாதக தோஷத்தை நீக்கவும் பல்வேறு சிறப்பு பூஜைகளை புகழ்பெற்ற திருக்கோயில்களில் செய்து வருகிறோம் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நோய் தீர்க்கும் சந்தைவெளியம்மன் திருக்கோயிலில் அம்மை நோயை தீர்க்கும் புகழ் பெற்றதால் அங்கு வருவதும் , காமாட்சி அம்மன் திருக்கோயில் பல்வேறு தியாகங்கள் மேற்கொள்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் உலக புகழ்பெற்ற அத்தி வருவதற்கு திருக்கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவதும், தங்கபல்லி சாபம் விலவகுவதால் பல வட மாநில பக்தர்கள் அதிக அளவு வருவது உண்டு.

அதேபோல் தைப்பூசம் திருவிழாவைக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயிலுக்கு அதிக அளவில் வரும் பக்தர்கள் காஞ்சி கோயில்களையும் கண்டு தரிசப்பது உண்டு.

அவ்வகையில் இக் கோவிலை கண்டு தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த கோயிலில் 10 உண்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இவைகளை எண்ணுவதற்கு இரு சுழற்சி முறைகளில் ஐந்து உண்டியலாக பிரித்து எண்ணுவது வழக்கம்.

அவ்வகையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வர் ப்ரீத்திகா , இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் வேதமூர்த்தி ,சின்ன காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் முத்துச்செல்வி ஆகியோர் முன்னிலையில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு குழு உறுப்பினர்கள் 120 பேர் உண்டியல் என்னும் பணியை காலை 8 மணிக்கு துவங்கினர்.

மாலை 7 மணி வரை நடைபெற்ற இப்பணியை அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

5 உண்டியல் முழுவதும் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் தங்கம் வெள்ளி என வகைப்படுத்தப்பட்டு வங்கி ஊழியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டதில் மொத்தமாக பக்தர்கள் 65 லட்சத்தில் 64 ஆயிரத்து நூத்தி ஐம்பத்தி எட்டு ரூபாயை காணிக்கையாக செலுத்தியது தெரியவந்தது.

இதேபோல் தங்கப் பொருட்களாக 211. 300 கிராம் தங்கம் 450.600 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றது

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறிய போது , நான்கு மாதங்களுக்குப் பிறகு ஐந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதாகவும் இவை அனைத்தும் வங்கியில் முதலீடாக செலுத்தப்பட்டது எனவும் தெரிவித்தனர்.