39 Passengers Corona Positive: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா

சென்னை: கடந்த மூன்று நாட்களில் மட்டும் சர்வதேச விமானங்கள் மூலமாக இந்தியா வந்த 39 பயணிகளுக்கு (39 Passengers Corona Positive) கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் புதிய வகையில் உருமாறி மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு பின்னரே அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் 498 சர்வதேச விமானங்களில் இருந்து வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி 1,780 பேருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனையில் 39 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. மேலும், அவர்களுக்கு பிஃஎப்7 ரக கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முடிவுகள் வந்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். புதிய, புதிய வைரஸ்கள் வருவதால் மீண்டும் லாக்டவுன் வந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.