Ponnis Selvan 2 Release Date: பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் எப்போது: புதிய தகவல்

சென்னை: அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் மாதம் 28ம் தேதி பொன்னியின் செல்வன் (Ponnis Selvan 2 Release Date) இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஷ்வர்யா ராய் மற்றும் சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரன் பிரபு, ஷோபிதா, ஐஸ்வர்யா லஷ்மி உட்பட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

அதிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருந்தது. பொன்னிநதி பக்கம் என்ற பாடல் இளம் தலைமுறை மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்த நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.