3 Baby in one delivery: ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்.. விட்டுச்சென்ற பெற்றோரால் அதிர்ச்சி

சேலம்: 3 children in one delivery.. Shocked by the abandoned parents. சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தையை விட்டுச்சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண்ணுக்கு கடந்த 20ம் தேதி ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த 3 குழந்தைகளுமே எடை குறைவாக பிறந்துள்ளதாகவும், குழந்தைகளை பராமரிக்கவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த மூன்று பெண் குழந்தைகளையும் வறுமையின் காரணமாக பராமரிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையிலேயே வைத்துக்கொள்ளுமாறு குழந்தைகளின் பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த குழந்தைகளை பெறமறுப்பு தெரிவித்து, மருத்துவமனை முதல்வர் வள்ளி, பெற்றோரிடம் மருத்துவமனை முதல்வர் குழந்தைகளின் அருமை குறித்து தன்னால் முடிந்த அளவுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இருப்பினும் தங்களால் 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் குடும்ப சூழ்நிலையை அவரிடம் மீண்டும் பெற்றோர்கள் தெரிவிக்கவே, மருத்துவமனை நிர்வாகமும் குழந்தைகளை விட்டுச்செல்ல சம்மதித்தது. இதனை அடுத்து குழந்தையை அவர்கள் அங்கேயே விட்டுச் சென்றனர்.

இதனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எடை குறைந்து பிறந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் 3 பெண் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் 3 குழந்தைகளும் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த முறையில் குழந்தைகளை பராமரிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.