Arrested 6 youths: மகளிர் கல்லூரி மாணவிகளிடம் இளைஞர்கள் அட்டகாசம்.. 6 பேர் அதிரடி கைது

மதுரை: In Madurai, police arrested 6 youths who were involved in a drunken rampage in front of a women’s college. மதுரையில் மகளிர் கல்லூரி முன் மது போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில் நேற்று மாலை இராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து அமரர் ஊர்தி ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்பாக டூவீலரில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் கூச்சலிட்டவாறு அதிவேகத்தில் சென்றனர். மேலும் அவர்கள் ஆபாசமான வார்த்தைகளை கூறியபடி, மாணவர்களை கையசைத்தபடியும் சென்றுள்ளனர். இதனால் பதறிப்போன அங்கிருந்த மாணவிகளும், பொதுமக்களும் பெரும் அச்சத்தில் ஓடினர்.

இதனையடுத்து மகளிர் கல்லூரி வாயில் முன்பாக நின்றுகொண்டு இளைஞர்கள் கூச்சலிட்டபோது, மாணவி ஒருவரின் தந்தை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மதுபோதை கும்பல் மாணவியின் தந்தையை தாக்கியதோடு, கல்லூரி வளாகத்திற்கு சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் மையமான கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மதுபோதையில் பட்ட பகலி்ல் இளைஞர்கள் செய்த இந்த அராஜக செயல் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மதுரை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, இன்று 6 பேரை கைது செய்துள்ளனர்.

அதன்படி,
1) சதீஷ்குமார் 19/22, த/பெ.சேது பாஸ்கரன், 3/84, பஜனைமடம் தெரு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
2) ராமமூர்த்தி 26/22, த/பெ. முருகன், 3/41, பஜனைமடம் தெரு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
3) நாகப்பிரியன் என்ற நவீன் 20/22, த/பெ. முத்துவேல், 3/107, பாலாஜி தெரு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
4) அஜித்குமார் 22/22, த/பெ. கண்ணன், 3/130, தேனி மெயின் ரோடு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
5) சோமசுந்தரம் 26/22, த/பெ. கேத்ராபாலு, 3/123, தேனி மெயின் ரோடு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்
6) சிவஞானம் 23/22, த/பெ. கேத்ராபாலு, 3/123, தேனி மெயின் ரோடு, அச்சம்பத்து, மதுரை மாவட்டம்

ஆகிய ஆறு நபர்களும் கும்பலாக சேர்ந்து அவரை வழிமறித்து மரணத்தை உண்டு பண்ணும் விதமாக நிலைகுலையச் செய்யும்படி தாக்கியதால் அவர் செல்லூர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கும்படி புகார்கொடுத்து பெண் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.