JIPMER HOSPITAL : ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி : Applications are invited for the post of Nursing Officer in Jipmar Hospital : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: செவீலியர் அதிகாரி (Nursing Officer)

காலியிடங்கள்: 433

சம்பளம்: மாதம் ரூ. 44,900

வயது வரம்பு: 01.12.2022 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பது அவசியம். 

தகுதி: பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம் முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள்.  தேர்வு ஒன்றரை மணி நேரம் நடைபெறும்.

கேள்வித் தாள் பொது அறிவு, பொது நுண்ணறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவில் இருந்து 30 சதவீத கேள்விகளும், செவிலியர் பாடப்பிரிவில் இருந்து 70 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,200, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1,500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு (For the differently abled) விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https:://www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.12.2022

ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Test) நடைபெறும் தேதி: 18.12.2022.

இந்த பணியில் சேர ஆர்வம், தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.