T20 World Cup: டி20 உலக கோப்பை: அரை இறுதி போட்டிக்கு செல்லுமா இந்தியா?

மெல்போர்ன்: T20 World Cup, Will India go to semi-finals : மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) ஜிம்பாப்வேக்கு எதிராக உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தை இந்திய அணி விளையாடுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு இந்த ஆட்டத்தில் சாதகமான முடிவு தேவை.

சூப்பர் 12 குரூப் பியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த போதிலும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா இன்னும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. ஒரு வேலை ஜிம்பாப்வே இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி ஆட்டத்தில் இருந்து வெளியேறும் சூழலை ஏற்படுத்தும்.

இந்தியா தற்போது 4 போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்றுள்ளது, 3ல் (பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக) வெற்றியும், ஒரு தோல்வியும் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) உள்ளது. இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா அணி 4 ஆட்டங்களில் 5 புள்ளிகளுடன் தகுதி பெறும் மற்றொரு அணியாகும்.

தலா 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு அணிகள் தகுதி பெற வாய்ப்புள்ளது. டி20 உலகக் கோப்பையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மைதானங்களில் மெல்போர்னும் ஒன்று. மெல்போர் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற‌ ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு போட்டிகளும் மழையால் விளையாட முடியாமல் போனது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் ஜிம்பாப்வே விளையாட உள்ளன. போட்டியின் போது மழை குறுக்கிட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். ஒரே ஒரு புள்ளி கிடைத்தால், இந்திய அணியின் மொத்த எண்ணிக்கையை 7 புள்ளிகளாக உயரும். இது அரை இறுதிக்கு செல்ல வசதியாக இருக்கும்.

என்றாலும் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்திடம் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 7 புள்ளிகளை எட்ட முடியும். இருப்பினும், மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் நான்காவது இடத்தில் உள்ள வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடும் போட்டியில் வெற்றி பெரும் அணி மட்டுமே 6 புள்ளிகளை எட்ட முடியும். 6 புள்ளிகள் பெற்றாலும் அந்த அணி 3 வது இடத்தில் இருக்கும். இதனால் முதல் இடத்திலோ அல்லது 2 வது இடத்திலோ இந்தியா இருக்கும். இதன் மூலம் அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறுவது செல்வது உறுதி.