144 prohibitory order, ban on sale of liquor : பெங்களூரில் விநாயகர் ஊர்வலத்தையொட்டி சில பகுதிகளில் 144 தடை உத்தரவு, மது விற்பனை செய்ய தடை

சின்னப்பா கார்டனில் மெயின் ரோடு, சேஷாத்திரி ரோடு, சர்ச் ரோடு, பி.ஜி.ரோடு, முனிசுவாமிய‌ப்பா ரோடு, சிவண்ணா சர்க்கிள், ஜே.சி. நகர் மெயின் ரோடு, ஹலசூர் வழியாக ஊர்வலம் சென்று, ஹலசூர் ஏரியில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.

பெங்களூரு: On the occasion of Ganesha procession 144 prohibitory orde, ban on sale of liquor : பெங்களூரில் விநாயகர் ஊர்வலத்தையொட்டி சனிக்கிழமை (செப். 3)சில பகுதிகளில் 144 தடை உத்தரவு, மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூர் மாநகரம் ஜே.சி.நகர் காவல் சரகம் (JC Nagar Police limits), வடக்கு காவல் ஆணையரகத்திற்குட்பட்ட‌ விஸ்வேஷ்வர் உத்சவ் சமிதி சார்பில், விநாயகர் திருவிழாவையொட்டி, 50 விநாயகர் சிலைகளை சனிக்கிழமை (செப். 3) ஊர்வலமாக கொண்டு சென்று, விசர்ஜனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, சின்னப்பா கார்டனில் மெயின் ரோடு, சேஷாத்திரி ரோடு, சர்ச் ரோடு, பி.ஜி.ரோடு, முனிசுவாமிய‌ப்பா ரோடு, சிவண்ணா சர்க்கிள், ஜே.சி. நகர் மெயின் ரோடு, ஹலசூர் வழியாக ஊர்வலம் சென்று, ஹலசூர் ஏரியில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் சனிக்கிழமை காலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை (Saturday 5 am to Sunday 6 am), ஜே.சி.நகர், ஆர்.டி. நகர், ஹெப்பாள், சஞ்சய்நகர், டி.ஜேஹள்ளி, பாரதிநகர் மற்றும் புலிகேசி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பகுதிகளில் உள்ள‌ அனைத்து மதுபானக் கடைகளையும் மூடவும், விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சியின் போது யாரேனும், மது போதையில் அமைதி மற்றும் சட்டம், ஒழுங்கிறகு குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 துணைப் பிரிவு (1) மற்றும் (3) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, சட்டம், ஒழுங்கைப் பேணி பாதுகாப்ப‌தற்காக மேல் கண்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு மற்றும் மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரேனும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றாலோ, அல்லது மது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.