Anbumani Ramadoss :அரசு காலிப் பணியிடங்களை ரத்து செய்ய குழு அமைப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை: Anbumani Ramadoss condemns setting up committee : அரசு காலிப் பணியிடங்களை ரத்து செய்ய குழு அமைப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணி இடங்கள் (Job vacancies) நிரப்பபடாமல் உள்ளன. இப்படி நிரப்பபடாமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக‌ உள்ள பணியிடங்களையும், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தற்காலிக பணி இடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைப்பதற்கு அரசு ஆணையிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். ஒரு பணியை 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமலேயே அந்தப் பணியிடம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றால், அத்தகைய பணியிடங்களை இனியும் வைத்திருக்க வேண்டியது இல்லை என்பதுதான் நிதித்துறையின் பார்வையாக உள்ளது.

அதே போல் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் காலத்திற்கு மட்டும் உருவாக்கப்பட்ட தற்காலிக பணி இடங்கள் அக்காலத்திற்கு பிறகு தொடர வேண்டிய அவசியமில்லை என்ற அரசின் பார்வை முழுக்க முழுக்க தவறானது ஆகும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் (DMK’s election manifesto), அரசு துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும், காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப் படும். புதிதாக 2 லட்சம் பணி இடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அரசு துறைகளில் ஒரு பணி இடங்கள் கூட புதிதாக உருவாக்கப் படவில்லை. இத்தகைய சூழலில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணி இடங்களை ஒழிக்க நினைப்பது நியாயம் இல்லை. இந்த முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர் (Lakhs of youth in Tamil Nadu are struggling to find employment opportunities). குறிப்பாக அரசு பணிகளில்தான் சேர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பல இளைஞர்கள், தனியார் துறைக்கு வேலைக்கு செல்லாமல் பிடிவாதமாக வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அது போன்றவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு பேரிடியாக உள்ளது. எனவே அரசு காலிப்பணியிடங்களை ரத்து செய்வதற்கு அமைக்க உள்ள குழுவை, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன் வர வேண்டும். இதன் மூலம் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்காக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.