Minister Anitha Radhakrishnan : அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami left the fort for the welfare of cattle during the AIADMK rule) என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கால்நடை பராமரிப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “எடுத்தோம், கவிழ்த்தோம்” என்று உண்மைக்கு புறம்பாக பல கட்டுக்கதைகளை அறிக்கையாக அவிழ்த்து விட்டுள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படக்கூடாது எனும் கொள்கையுடன் முதல்வர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக‌ அரசு கால்நடைகளின் உடல்நலம் பேணுதலில் சிறப்பு கவனம் (The DMK government is paying special attention to the health of livestock) செலுத்தி வருகிறது.

ஆனால் மத்திய அரசிடமிருந்து கடந்த செப்டம்பர் 2020-ல் பெறப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகளைக் கூற பெறாமல் கோட்டை விட்டதுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. ஆனால் தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் மத்திய அரசுக்கு தொடர்ந்து நேரடியாகவும், கடிதங்கள் மூலமும், அழுத்தம் கொடுத்ததன் விளைவாக செப்டம்பர் 2021-முதல்  ஜுன் 2022 வரை  நான்கு தவணைகளாக  87 இலட்சம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு (87 lakh vaccines have been received in four installments), கால்நடைகளுக்கு தடுப்பூசித் திட்டம் திறமையாக நடத்தப்பட்டது திமுக ஆட்சியில்தான் என்பதை எதிர்கட்சி தலைவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய  தடுப்பூசி பணிகளுக்கும் முன்கூட்டியே, கடந்த ஜுன்-2022, ஜுலை-2022, ஆகஸ்ட்-2022 ஆகிய மாதங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் மூலமாகவும், செப்டம்பர்-2022-ல் தலைமைச் செயலர் மூலமாகவும் மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த 90 லட்சம் தடுப்பூசிகளையும் டிசம்பர் 2022-க்குள் வழங்கி விடுவதாக மத்திய அரசு (Central government to provide 90 lakh vaccines by December 2022) 24.11.2022 அன்று உறுதியளித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கோமாரி நோயின் பாதிப்பு ஏற்படவில்லை (Tamil Nadu there is no incidence of gonorrhea). எனினும் அவசர தேவைகளுக்கு என சுமார் ஐந்து இலட்சம் கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் அரசிடம் கையிருப்பில் உள்ளது. அதிமுக ஆட்சியில் கால்நடைகள் நலனில் கோட்டை விட்டவர் எடப்பாடி பழனிசாமி, அவர் அரசியல் லாபத்திற்காக திமுக அரசை குறை கூறி உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.