Deepam festival : திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை: Karthigai Deepam festival : காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நிறைவு பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு (Temple opened at 3.30 am) அருணாசலேஸ்வர , உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன‌. பின்னர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வர , பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கோயில் தங்கக்கொடிமரம் அருகே அருள்பாலித்தனர்.

அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடிமரத்தில், சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபத் திருவிழாவுக்கான ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது (Rishaba flag hoisted for Deepa festival).

இதன் பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். டிசம்பர் 3 – ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், 6 – ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமலை மீது மகா தீபமும் (Bharani Deepam and Maha Deepam are lighted on the 2,668 feet high hill) ஏற்றப்படுகிறது.

முன்னதாக‌, புதுப்பிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரின் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் இரா.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெகந்நாதன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

திருவண்ணாமலையில் 10 நாள்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 – ஆவது நாளில் பஞ்சரதங்களின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக . 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேரோட்டம் (After 2 years now Chariot take place) நடைபெறுவதால் பஞ்சரதங்களையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.