Virat Kohli retire : ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா?

இப்போது 34 வயதான விராட் கோலி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை எதிர்நோக்குகிறார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

பெங்களூரு: (Virat Kohli retire) இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி அன்மையில் தனது 71வது சர்வதேச சதத்தை அடித்து கலக்கினார். ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 34 வது சர்வதேச சதம் 34 மாதங்கள் சதம் அடிக்காமல் இருந்ததை மறக்கச் செய்தார். அதுமட்டுமின்றி, ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 276 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை (T20 World Cup) வெல்ல வரிந்து கட்டும் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் குறுகிய உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இவ்வாறு கணித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு (Retired from international cricket) பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த, விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து விடைபெற வாய்ப்புள்ளது. அவரிடத்தில் நான் இருந்திருந்தால் இதே முடிவை எடுப்பேன்” என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 போட்டிகளை எட்டினார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய உலகின் 2வது வீரர் மற்றும் இந்தியாவின் முதல் வீரர் என்ற சாதனையை (The record of becoming the first player of India) விராட் கோலி படைத்துள்ளார். தனது வாழ்க்கையில் மொத்தம் 104 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 51.94 என்ற அற்புதமான சராசரியில் 3,584 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் உலக சாதனையான 32 அரைசதங்களும் அடங்கும்.