woman killed grandmother : ஆன்லைன் லோன் ஆப்ஸ் மூலம் தொல்லை: கடனை அடைக்க பாட்டியைக் கொன்ற பேத்தி

Warje woman killed grandmother : பேத்தி போலீசில் கொடுத்த தகவலின்படி, வீட்டில் இருந்த சுமார் 36 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பாட்டியின் தங்க ஆபரணங்களான நெக்லஸ், காதணிகள் காணாமல் போனது.

புணே: woman killed grandmother : கடனை அடைப்பதற்காக பாட்டியை பேத்தி கொன்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வார்ஜே நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை மாலை, வர்ஜேவில் ஒரு மூதாட்டி கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டது காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு, இறந்த மூதாட்டியின் பேத்தியின் செயல் என்பது தெரிய வந்தது. கடனை அடைப்பதற்காக பாட்டியின் பணம் மற்றும் விலையுயர்ந்த‌ பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு பேத்தியே இந்த செயலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பேத்தி பல்வேறு ஆன்லைன் கடன் தளங்களில் கடன் பெற்றுள்ளார்.

சுலோச்சனா சுபாஷ் டாங்கே (70) (Sulochana Subhash Dange) செவ்வாய்கிழமை மாலை ஆகாஷ்நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ஒரு வங்கியின் கடன் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் அவரது பேத்தி கௌரி டோங் புகார் அளித்துள்ளார். இறந்தவர் தனது மகன் சுனில் மற்றும் பேத்தி கௌரியுடன் வீட்டில் வசித்து வந்தார்.

வீட்டில் இருந்த சுமார் 36 ஆயிரம் ரூபாய் ரொக்கம் (36 thousand rupees in cash), பாட்டியின் தங்க ஆபரணங்களான நெக்லஸ், காதணிகள் காணாமல் போயுள்ளதாக பேத்தி போலிஸாருக்கு வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேத்தி கொடுத்த புகாரை பதிவு செய்த போலீசார், முதலில் இதனைக் கொள்ளை வழக்கு என நினைத்தனர். சடலத்தின் அருகே சவரக் பிளேடையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்த ரேஸர் பிளேடால் மூதாட்டியின் கழுத்தை அறுத்துள்ளனர். காலை 10.30 மணி முதல் வீட்டில் பாட்டி தனியாக இருந்ததாகவும், அவரும் அவரது தந்தையும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கௌரி போலீசாரிடம் தெரிவித்தார்.

பேத்தியின் வாக்குமூலத்தால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் (The police suspicious) ஏற்பட்டது. இதனால், இந்த வழக்கில் கௌரியின் பங்கு என்ன என்பது குறித்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில், கௌரி தனது செலவுகளுக்காக ஆன்லைன் தளங்களில் கடன் வாங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கடன் கொடுத்த நிறுவனங்கள், கௌரிக்கு போன் செய்து கடனை திருப்பி செலுத்தும்படி தொந்தரவு செய்து வந்தனர். இந்த அழுத்தம் காரணமாக மூதாட்டியை, கௌரி தலையணையால் மூச்சுத்திணறிச் செய்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, விசாரணையில், சவரப் பிளேடு மற்றும் ஸ்க்ரூ டிரைவர் மூலம் சடலத்தை காயப்படுத்தியது தெரிய வந்தது.

காலை 10.30 மணியளவில் கௌரியின் பாட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துணை போலீஸ் கமிஷனர் (மண்டலம் 3) பூர்ணிமா கெய்க்வாட் (Purnima Gaikwat) கூறுகையில், “பாட்டியைக் கொன்று கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் பேத்தியை கைது செய்துள்ளோம். பேத்தி தங்க நகைகளை விற்று கடனை அடைக்க முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.